தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அர்ஜெண்டினா ஓபன்: காலிறுதிச்சுற்றில் சுமித் நகல்! - அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ்

அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் சுமித் நகல் முதல் முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதித்துள்ளார்.

Watch: Sumit Nagal record biggest win of his career, beats Garinto in Argentina Open
Watch: Sumit Nagal record biggest win of his career, beats Garinto in Argentina Open

By

Published : Mar 4, 2021, 1:22 PM IST

அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் தலைநகரான புவெனோய் அயர்ஸில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல் - சிலி நாட்டின் கிறிஸ்டியன் கரினுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் நகல் முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கிலும் கைப்பற்றி கிறிஸ்டியனுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் சுமித் நகல் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தி அர்ஜெண்டினா ஓபான் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் சுமித் நகல் சர்வதேச டென்னிஸ் தொடரில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. நாளை நடைபெறவுள்ள ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சுமித் நகல், ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸை எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: இருக்கையை பதம் பார்த்த மேக்ஸ்வெல் அடித்த சிக்சர்!

ABOUT THE AUTHOR

...view details