மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (பிப். 16) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவானின் சீஹ் சு வெய்யை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல்செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி சு வெய்க்கு அதிர்ச்சி கொடுத்தார்.