தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி! - ஆஸ்திரேலியன் ஓபன்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் நான்காம் நிலை வீரரான டேனில் மெத்வதேவ் போராடி வெற்றி பெற்றார்.

Watch: Medvedev sends off his coach and Krajinovic to advance in five at Aus Open
Watch: Medvedev sends off his coach and Krajinovic to advance in five at Aus Open

By

Published : Feb 13, 2021, 4:44 PM IST

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இன்று(பிப்.13) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் நான்காம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் பிலிப் க்ராஜினோவிச்சை எதிர்கொண்டார்.

பரபரப்பான இப்போட்டியின் முதல் இரண்டு செட்டை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றி க்ராஜினோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ராஜினோவிச் 6-4, 6-3 என்ற கணக்குகளில் முறையே மூன்று மற்றும் நான்காம் செட்டைக் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார்.

பரபரப்பான ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி

பின்னர் நடந்த வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய மெத்வதேவ் 6-0 என்ற கணக்கில் ஐந்தாவது செட்டைக்கைப் பற்றி அசத்தினார்.

இதன் மூலம் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்குகளில் பிலிப் க்ராஜினோவிச்சை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: சதமடித்து அசத்திய ரோஹித்; வலிமையான நிலையில் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details