மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (பிப்.17) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடி, சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய பெகுலா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜெனிஃபர் பிராடிக்கு அதிர்ச்சியளித்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய பிராடி இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.