சர்வதேச டென்னிஸில் புகழ்பெற்ற வீரராக திகழ்பவர் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டென்னிஸில் தனது 18ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார்.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் பட்டியலில் நோவாக் ஜோகோவிச் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
முன்னதாக சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது நோவாக் ஜோகோவிச் 311 வாரங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து முறியடித்துள்ளார்.
டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த வீரர்கள் பட்டியல்
- நோவாக் ஜோகோவிச் - 311 வாரங்கள்
- ரோஜர் ஃபெடரர் - 310 வாரங்கள்
- பீட் சம்ப்ராஸ் - 286 வாரங்கள்
- இவான் லென்ட்ல் - 270 வாரங்கள்
- ஜிம்மி கோனர்ஸ் - 268 வாரங்கள்
- ரஃபேல் நடால் - 209 வாரங்கள்
- ஜான் மெக்கன்ரோ - 170 வாரங்கள்
இதையும் படிங்க: ‘பெண்களே நம்மைவிட வலிமையானவர்கள்’ - விராட் கோலி