தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘கோப்பையை வெல்ல மெத்வதேவ் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்’ - ஜோகோவிச் - ஆஸ்திரேலியன் ஓபன்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நோவாக் ஜோகோவிச், கோப்பையை வெல்வதற்கு மெத்வதேவ் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

Watch: Djokovic jokes that Medvedev may need to wait for Grand Slam win
Watch: Djokovic jokes that Medvedev may need to wait for Grand Slam win

By

Published : Feb 21, 2021, 10:03 PM IST

நடந்து முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வை வீழ்த்தி, ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.

இதற்கான கோப்பை வழங்கும் நிகழ்வில் பேசிய ஜோகோவிச், "இன்றைய போட்டியில் டேனில் மெத்வதேவ்வுடன் விளையாடியது போன்று எனது டென்னிஸ் வாழ்கையில் கடினமான ஆட்டத்தை நான் விளையாடியது இல்லை. நிச்சயம் மெத்வதேவ் இந்த சாம்பியன் பட்டத்திற்கு தகுதியானவர் தான்.

‘கோப்பையை வெல்ல மெத்வதேவ் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்’

ஆனாலும் அவர் கோப்பையை வெல்வதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதேசமயம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியன் ஓபனில் விளையாடும் போது நான் புதுமையாக உணர்கிறேன். அதற்கு காரணம் நீங்கள் காட்டும் அன்புதான். மீண்டுமொரு முறை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே கோப்பை : தமிழ்நாடு அணி வெற்றி

ABOUT THE AUTHOR

...view details