தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா! - ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்று

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.

Watch | Australian Open: Osaka survives Muguruza's challenge, makes it to quarterfinals
Watch | Australian Open: Osaka survives Muguruza's challenge, makes it to quarterfinals

By

Published : Feb 14, 2021, 11:21 AM IST

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா - ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எதிர்கொண்டார்.

போட்டியில் தொடத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகுருசா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஒசாகாவிற்கு அதிர்ச்சிக் கொடுத்தார். பின்னர் சூதாரித்துக்கொண்ட ஒசாகா சிறப்பாக விளையாடி இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

இதன் மூலம் நவோமி ஒசாகா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்குகளில் கார்பைன் முகுருசாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: பரபரப்பான ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details