தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: ஆஷ்லேவுக்கு அதிர்ச்சியளித்த முச்சோவா! - கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா வெற்றிபெற்று அசத்தினார்.

Watch | Australian Open: Muchova upsets Ashleigh Barty to book semi-finals berth
Watch | Australian Open: Muchova upsets Ashleigh Barty to book semi-finals berth

By

Published : Feb 17, 2021, 10:19 AM IST

மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (பிப். 17) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய ஆஷ்லே முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி முச்சோவாவிற்கு அதிர்ச்சியளித்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய முச்சோவா இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஆஷ்லேவுக்கு அதிர்ச்சியளித்த முச்சோவா

ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் திறனை வெளிப்படுத்திய முச்சோவா 6-2 என்ற கணக்கில் ஆஷ்லேவை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தோல்வியின் மூலம் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச்சுற்றோடு வெளியேறினார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அரையிறுதி; ரஷ்ய வீரர் அபார சாதனை!

ABOUT THE AUTHOR

...view details