மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் குரோஷியாவின் இவான் டோடிக், ஸ்லோவேக்கியாவின் ஃபிலிப் போலசெக் இணை அமெரிக்காவின் ராஜூவ் ராம், இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி இணையை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய டோடிக் இணை முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றி ராஜீவ் ராம் இணைக்கு அதிர்ச்சியளித்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் டோடிக், போலசெக் இணை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ராஜீவ் ராம், சாலிஸ்பெரி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
டோடிக், போலசெக் இணை சாம்பியன் இப்போட்டியில் வெற்றி பெற்ற டோடிக் இணைக்கு கோப்பையும், 3 கோடியே 42 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம் இடம் பிடித்த ராஜீவ் ராம் இணைக்கு பரிசுத் தொகையாக 1 கோடியே 94 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:டி20 போட்டிகள்: நடராஜன், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு!