தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#USOpen மீண்டும் பட்டத்தைத் தனதாக்கிய நடால் - #ரஃபேல் நடால்

யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் பட்டம் வென்றார்.

Rafael Nadal

By

Published : Sep 9, 2019, 8:08 AM IST

2019ஆம் ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் இத்தாலி வீரர் மேட்டியோ பெரிட்டினியை தோற்கடித்தார். அதேபோல ரஷ்யாவின் நட்சத்திர வீரர் டேனில் மெட்வதேவ் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

நடால்

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டியில், ரஃபேல் நடாலும் டேனில் மெட்வதேவும் மோதினர். நான்காவது முறையாகக் கோப்பை வெல்லும் முனைப்பில் நடாலும், சென்ற மாதம் ரோஜர்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நடாலிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்கும் முனைப்பில் டேனில் மெட்வதேவும் ஆடியதால், ஒவ்வொரு செட்டிலும் அனல் பறந்தது.

நடாலின் குட்டி ரசிகர்

முதல் செட்டிலேயே இருவரும் மாறி மாறிப் புள்ளிகளைக் குவித்தனர். ஆனாலும் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் நடால் முதல் செட்டை வென்றார். இரண்டாவது செட்டையும் 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் தன்வசமாக்கினார் நடால். இந்நிலையில் மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வதேவ் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று நடாலுக்கு அதிர்ச்சியளித்தார். நான்காவது செட்டையும் 6 - 4 என மெட்வதேவ் கைப்பற்ற, ஆட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

செட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் நடால்

கோப்பை கைப்பற்றும் முனைப்பில் இருவரும் ஆடியதால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த செட் நீடித்தது. ஆனாலும் இறுதியில் நடால் 6 - 4 என்ற புள்ளிக் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கோப்பையைத் தனதாக்கினார். நான்கு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவை 7-5,6-3,5-7,4-6,6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் வீழ்த்தி நான்காவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றினார்.

போராடி வென்ற கோப்பையைக் கட்டி தழுவும் நடால்

ABOUT THE AUTHOR

...view details