கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், தரவரசியில் 88ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஐந்தாம் நிலை ரஷ்ய வீரர் டேனில் மேத்வதெவுடன் மோதினார்.
#USOPEN2019: முதல் சுற்றில் போராடி தோல்வியடைந்த மற்றொரு இந்திய வீரர்!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ரஷ்யாவின் டேனில் மேத்வதெவிடம் தோல்வி அடைந்தார்.
Prajnesh Gunneswaran
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மேத்வதெவின் ஆட்டத்துக்கு குணேஸ்வரனால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால், அவர் 4-6, 1-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
முன்னதாக, இன்று காலை நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீரர் சுமித் நகல், சுவிஸ் வீரர் ஃபெடரருடன் போராடி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.