உலகின் தலைசிறந்த எட்டு வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி ஃபைனல்ஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் பங்கேற்ப்பதற்கு முன்னதாக, இந்த ஆண்டின் முதல்நிலை வீரராக நிறைவு செய்ததற்கான கோப்பை ஜோகோவிச்சிடம் வழங்கப்பட்டது.
இந்தக் கோப்பையை ஜோகோவிச் ஆறாவது முறையாகக் கைப்பற்றியுள்ளார். இதனால் முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் பீட் சாம்பிராஸின் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
கோப்பையைப் பெற்ற ஜோகோவிச் இந்தக் கோப்பையைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய ஜோகோவிச், ''மகிழ்ச்சியும் சோகமும் ஒருசேர கலவையான உணர்வுகளுடன் இருக்கிறேன். ஏனென்றால் இந்த ஆண்டு முதலே பலரும் நீண்ட நாள்களாக டென்னிஸ் தொடர்களில் பங்கேற்கவில்லை. ஆறு மாதங்களுக்குப் பின் பணிக்குத் திரும்பியுள்ளதால், இப்போது நன்றாக விளையாடுவதாக உணர்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க:ஏடிபி ஃபைனல்ஸ்: இரண்டாவது சுற்றில் நடால்..!