2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் தொடங்கியது. இதன் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் 39 வயதாகும் அனுபவ வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து 15 வயது வீராங்கனை கோகோ காஃப் விளையாட இருந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று தொடங்கிய ஆட்டத்தில் முதல் சுற்றில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இரண்டு பாய்ன்ட்களை கோகோ கைப்பற்ற, பதிலடியாக வீனஸ் வில்லியம்ஸ் முதல் பாய்ன்ட்டைப் பெற்றார். ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் 3-1 என கோகோ பக்கம் செல்ல, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் ஆட்டம் 6-6 என நிற்க , டை ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரில் கோகோ காஃப் 7-5 எனக் கைப்பற்றினார். இதனால் கோகோ முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார்.