தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டென்னிஸ்: பயஸ் ஜோடி தோல்வி - கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

பயஸ்

By

Published : Jun 2, 2019, 11:19 AM IST

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரான்ஸ்-ன் பெனோய்ட் பைர் (Benoit Paire) ஜோடி, கொலம்பியாவின் செபஸ்டியன் கபால், ராபர்ட் ஃபராஹ் இணையை எதிர்கொண்டது.

இதில், முதல் செட்டை 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த பயஸ் ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றியது. இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் பயஸ் ஜோடி 3-6 என்ற கணக்கில் வீழ்ந்தது.

இதன் மூலம், பயஸ் ஜோடி இப்போட்டியில் 0-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

ABOUT THE AUTHOR

...view details