தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2020, 12:59 PM IST

ETV Bharat / sports

விளையாட்டு மீண்டும் நம்மை ஒருங்கிணைக்கும் - ஒசாகா நம்பிக்கை

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை நான் ஆதரிக்கிறேன் என்று நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்.

Sport will eventually unite us again: Osaka supports Olympic delay
Sport will eventually unite us again: Osaka supports Olympic delay

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலக நாடுகள் கடுமையான சூழலைச் சந்திந்துவருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றின் காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல முக்கியத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு-வருகின்றன.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைப் பற்றிய எனது எண்ணங்களை சில நாள்களாக எவ்வாறு வெளிப்படுத்துவது என்ப்தை யோசித்துவருகிறேன். எனது சொந்த நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இந்தாண்டு அது நடைபெறப்போவதில்லை என்றவுடன் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் 2021இல் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு இப்போது இருப்பதைவிட பலமடங்கு பலத்துடன் செயல்பட என்னை தயார்படுத்திவருகிறேன். ஜப்பான் பிரதமர் அபேயின் முடிவையும், ஐஓசி-யின் 100 விழுக்காடு ஒத்துழைப்பையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”விளையாட்டு மீண்டும் நம்மை ஒன்றிணைக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல; எல்ல நாடுகளிலும் உள்ள மக்களை நாம் ஒன்று கூடி காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனாவுக்கு பாட்டெழுதிய ‘சாம்பியன்’ பிராவோ!

ABOUT THE AUTHOR

...view details