தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விம்பிள்டன்: செரினாவை அப்செட் செய்து பட்டத்தை வென்ற சிமோனா - Simona Halep

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

விம்பிள்டன்: செரினாவை அப்செட் செய்து பட்டத்தை வென்ற சிமோனா

By

Published : Jul 13, 2019, 8:21 PM IST

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

இதுவரை ஏழு விம்பிள்டன் பட்டம் உட்பட 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரினா, இன்றைய போட்டியில் வெற்றிபெற்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் 24 பட்டங்களை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

விம்பிள்டன் பட்டத்தை வென்ற சிமோனா

ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே செரினா, சிமோனாவின் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். இதனால், சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செரினாவை மிக எளிதாக வீழ்த்தி தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details