டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில், ஃபைனல்ஸ் பிரிவில் மொத்தம் 18 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், குரூப் ஏ பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் செர்பியா - பிரான்ஸ் அணிகள் மோதின.
காலிறுதிச் சுற்றில் செர்பியா! - Davis Cup 2019
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் செர்பியா அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஃபிலிப் கிரஜ்னோவிக் 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சொங்காவை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவோக் ஜோகோவிக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனாட் பைரீயை தோற்கடித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் ஹர்பேர்ட்/மஹட் இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செர்பியாவின் ஜன்கோ/விக்டர் இணையை வீழ்த்தியது. இதன் மூலம், செர்பியா அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.