கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் என்ற யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் ஷப்போவலோவ் இணை பிரஞ்சின் நிக்கோலஸ் மஹூத், ஹியூஸ் ஹெர்பர்ட் இணையை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணாவின் இணை, முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் நிக்கோலஸ் மஹூத் இணையை வீழ்த்தியது.