ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் நான்காவது சுற்று ஆட்டங்கள் இன்று நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஹங்கேரிய டென்னிஸ் வீரர் பியூசோவிக்ஸ் ஆடினார்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை யாரும் எதிர்பாராதவிதமாக பியூசோவிக்ஸ் கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பை எட்டியது. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-1 என ஃபெடரர் கைப்பற்ற, அதையடுத்து ஃபெடரர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் நடந்த மூன்றாவது மற்றும் நான்காவது செட் ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்று ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.