விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார்.
விறுவிருப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற கணக்குகளில் ஜப்பானின் நிஷிகோரி வென்றார்.
அதன்பின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஃபெடரரர், இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்குகளில் வென்றார்.
இதையடுத்து, தனது திறமையான ஆட்டத்தின் மூலம் 3ஆவது மற்றும் 4ஆவது செட்களை 6-4, 6-4 என்ற கணக்குகளில் கைப்பற்றி ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் ஃபெடரர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் 100ஆவது முறையாக வெற்றி பெற்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் உலக டென்னிஸ் வரலாற்றில் தனி ஒரு வீரராக 100 விம்பிள்டன் வெற்றியை பெற்றவர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர்.
அது மட்டுமல்லாமல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 13ஆவது முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர்.