நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் - குரோஷியாவின் மரின் சிலிக் மோதினர்.
யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: காலிறுதிச் சுற்றில் நடால் - US Open Nadal
யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் நடால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Nadal
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நடால் 6-3, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இதேபோல் நடைபெற்ற மற்றொரு நான்காம் சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் தியாகோ 3-6, 6-2, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜுவர்வை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (செப்டம்பர் 5) நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் நடால், தியாகோவை சந்திக்கவுள்ளார்.