தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கத்தார் ஓபன் தொடரை வென்ற ரோகன் போபண்ணா ஜோடி! - கத்தார் ஓபன் தொடரை வென்ற ரோகன் போபண்ணா ஜோடி!

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் வெஸ்லி இணை வென்று அசத்தியது.

Rohan Bopanna and Wesley Koolhof win doubles title in Doha
Rohan Bopanna and Wesley Koolhof win doubles title in Doha

By

Published : Jan 12, 2020, 8:19 AM IST

2020ஆம் ஆண்டுக்கான கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடைபெற்றது. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் வெஸ்லி இணை, பிரிட்டனின் லுக் பாம்பிரிட்ஜ், மெக்சிகோவின் சான்டிகோ கொன்சாலஸ் ஜோடியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த போபண்ணா - வெஸ்லி இணை அதன்பின் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க டை பிரேக்கர் முறையில் நடைபெற்ற கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய போபண்ணா ஜோடி, அந்த செட்டை 10-6 என்ற கணக்கில் வென்றது.

இறுதியில், போபண்ணா - வெஸ்லி இணை 3-6, 6-2, 10-6 என்ற செட் கணக்கில் பாம்பிரிட்ஜ் - கொன்சாலஸ் ஜோடியை வீழ்த்தி கத்தார் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. நடப்பு சீசனில் இந்த போபண்ணா - வெஸ்லி இணை வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எப்போது ஓய்வு? லியாண்டர் பயஸ் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details