தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டென்னிஸ்: தரவரிசையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிய பிரஜ்னேஷ் - ரஃபேல் நடால்

ஆடவர்களுக்கான ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் முன்னேறி 84ஆவது பிடித்து அசத்தியுள்ளார்.

பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

By

Published : Mar 19, 2019, 2:26 PM IST


ஆடவர்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் சுற்று தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய வீரர் பிரேஜ்னேஷ் குணேஸ்வரன் தனது வாழ்நாளில் முதல்முறையாக 84ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன்வெல்ஸ் ஓபன் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தரவரிசையில் 18ஆம் நிலை வீரரான நிக்கோலோஸ் பஷிலாஸ்விலியை இவர் வீழ்த்தியதன் மூலம் 61 புள்ளிகளை பெற்றார். இதனால் இவர் தரவரிசையில் 97ஆவது இடத்தில் இருந்து தற்போது 84ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், செர்பிய வீரர் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் மியாமி மாஸ்டர்ஸ் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் ஹட்ரியன் மேனின்டஸை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details