தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய வீரர் - ஆஸ்திரேலியன் ஓபன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெளியேறினார்.

Prajnesh Gunneswaran lost to Japanese Player Tatsuma Ito in First Round of AO 2020
Prajnesh Gunneswaran lost to Japanese Player Tatsuma Ito in First Round of AO 2020

By

Published : Jan 21, 2020, 12:50 PM IST

2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்துவருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல்சுற்று ஆட்டங்கள் நடந்துவருகின்றன. அதில் ஜப்பான் வீரர் டட்சுமா இடோவை எதிர்த்து இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆடினார்.

இதில் தொடக்கம் முதலே ஜப்பான் வீரர் முன்னிலையிலேயே இருந்தார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஜப்பான் வீரர் இடோ 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

அதையடுத்து நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தில் கடுமையாகப் போட்டியளித்த பிரஜ்னேஷ், 6-5 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் இழந்தார். இந்தப் போட்டியில் அடைந்த தோவ்லியையடுத்து இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

முன்னதாக, தகுதிச்சுற்றில் பிரஜ்னேஷ் தோல்வியடைந்தார். இதையடுத்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி, போலாந்தின் கமில் , ஊக்கமருந்து விவகாரம் காரணமாக நிக்கோலஸ் ஜெரி ஆகியோர் விலகியதால், முதல் சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை பிரஜ்னேஷ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குணேஸ்வரனுக்கு அடித்த லக்கி ஜாக்பாட் - ஜோகோவிச்சுடன் மோதலா?

ABOUT THE AUTHOR

...view details