ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச டென்னி நிபுணர் குழு வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், ஆஸ்திரேலியன் ஓபனில் இரண்டாம் இடம் பிடித்த ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.