தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிராண்ட்ஸ்லாம் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அரேபிய வீராங்கனை!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்மூலம், கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அரேபிய வீராங்கனை என்ற பெருமையை துனிஷியாவின் ஆன்ஸ் ஜபர் பெற்றுள்ளார்.

Ons Jabeur became the first  Arab woman to reach Grand Slam quarters
Ons Jabeur became the first Arab woman to reach Grand Slam quarters

By

Published : Jan 26, 2020, 3:43 PM IST

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் துனிஷியாவைச் சேர்ந்த அரேபிய வீராங்கனை ஆன்ஸ் ஜபர் (Ons Jabeur) பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காம் போட்டியில் அவர், சீனாவின் வாங் கியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜபர், 7-6(4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அரேபிய வீராங்கனை என்ற பெருமையை ஆன்ஸ் ஜபர் பெற்றுள்ளார். 25 வயதான இவர், வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோஃபியா கெனின்னை எதிர்கொள்ளவுள்ளார்.

இதையும் படிங்க:முத்தமுடன் சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நடால்!

ABOUT THE AUTHOR

...view details