கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் லாரன் டேவிஸை எதிர்கொண்டார்.
#USOpen2019: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஆஷ்லே பார்டி! - மூன்றாவது சுற்று
யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீராங்கனையான ஆஷ்லே பார்டி 6-1, 7-6 என்ற செட் கணக்குகளில் லாரன் டேவிஸை (Lauren Davis) வீழ்த்தினார்.
asheley barty
ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே 6-2 என முதல் செட் கணக்கை லாரன்சிடமிருந்து பறித்தார். கடும் போட்டிக்கு இடையே இரண்டாவது செட்டையும் ஆஷ்லே 7-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி லாரன் டேவிஸை வீழ்த்தினார்.
இதன் மூலம் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே பார்டி 6-2, 7-6 என்ற செட் கணக்குகளில் லாரன் டேவிஸை தோற்கடித்து யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.