கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கான போட்டியில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் லூக்கா டேனில் மெட்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கொய்பெரை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் கொய்பெர் முதல் செட் கணக்கை 6-3 என்ற புள்ளிகளில் மெட்வதேவை வீழ்த்தினார். அதன் பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வதேவ் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கொய்பெரிடமிருந்து கைப்பற்றினார்.
அதன் பின் அடுத்தடுத்து இரண்டு செட்கணக்குகளையும் டேனில் மெட்வதேவ் 6-2, 7-6 என்ற கணக்குகளில் டொமினிக் கொய்பெரை வீழ்த்தினார்.