#RolexShMasters : சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை அமெரிக்காவின் ஜான் இஷ்னர் எதிர் கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட் கணக்கை 7-5 என்ற கணக்கில் இஷ்னரிடமிருந்து கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்தும் தனது அதிரடியை வெளிப்படுத்திய ஜோகோவிச் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி இஷ்னரை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஷாங்காய் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும் இவர் கடந்த வாரம் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாம்பியன் பட்டத்துடன் டென்னிஸில் கம்பேக் தந்த ஜோகோவிக்!