2019ஆம் ஆண்டுக்கான பஞ்சா லுகா சேலஞ்சர் டென்னிஸ் தொடர் போஸ்னியாவில் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நகல் பங்கேற்றார். யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இவர் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து விளையாடியவர்.
டென்னிஸ்: இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவிய இந்திய வீரர் #BanjaLukaChallenger - ஃபெடரர்
பஞ்சா லுகா சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீரர் சுமித் நகல் தோல்வி அடைந்தார்.
விராட் கோலி இல்லை என்றால் நான் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை - சுமித் நகல்
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுமித் நகல், நெதர்லாந்து வீரர் தலூன் க்ரீக்ஸ்பூர் (Thallon Griekspoor) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அவர் 2-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். முன்னதாக, யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்றதால், இவர் டென்னிஸ் தரவரிசையில் 174ஆவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.