2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் களிமன் ஆடுகளத்தின் முடிசூடா மன்னன் ரஃபேல் நடாலை எதிர்த்து ஜப்பானின் நிஷிகோரி ஆடினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய களிமண் ஆடுகள மன்னன்! - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் நிஷிகோரியை வீழ்த்தி களிமண் ஆடுகளத்தின் மன்னன் ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
நிஷிகோரி
இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-1 எனக் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் நடாலின் ஆக்ரோஷத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத நிஷிகோரி திணற, மூன்றாவது செட்டை 6-3 என நடால் கைப்பற்றி, பிரெஞ்சு ஓபன் தொடரில் 12ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.