தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜோகோவிச்சை வீழ்த்தணும்னா இத செய்யுங்க - டிப்ஸ் கொடுக்கும் நடால்!

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில் சோங்காவை வீழ்த்தி ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Nadal advances in Paris

By

Published : Nov 2, 2019, 1:37 PM IST

ஆடவருக்கான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் போட்டிகள் பாரிசில் நடைபெற்றுவருகிறது. இதன் காலிறுதிச் சுற்றில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடாலை எதிர்த்து ஃபிரான்ஸ் வீரர் சோங்கா ஆடினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் தொடக்கம் முதலே இரு வீரர்களும் சரிசமமாக புள்ளிகளைப் பெற்று திறமையை வெளிப்படுத்தினர். இதனால் முதல் செட் ஆட்டம் டை - பிரேக்கர் வரை சென்றது. இறுதியாக முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் நடால் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் நடால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஈடுகொடுக்க முடியாமல் சோங்கா தடுமாறினார். இறுதியாக 6-1 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி, பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு நடால் தகுதிபெற்றார்.

ரஃபேல் நடால்

இந்தத் தொடரோடு சேர்த்து இதுவரை நான்கு முறை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நடால், ஒருமுறை கூட வெற்றிபெற்றதில்லை. இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் டேனிஸ் ஷபோவாலோவை நடால் எதிர்கொள்ளவுள்ளார்.

இந்த வெற்றி குறித்து நடால் பேசுகையில், "கடந்த சில நாள்களாக சிறப்பாக ஆடிவருகிறேன். இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இறுதிப் போட்டியில் உலகின் தலைசிறந்த வீரரை எதிர்கொள்ள வேண்டும். ஜோகோவிச் போன்ற வீரர்களை வெற்றிபெற வேண்டும் என்றால், என்னுடைய மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா- அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details