2020ஆம் ஆண்டுக்கான பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் என அழைக்கப்படும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதிவரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர்கள் நடால், ஜோகோவிச், கோகோ காஃப், செரினா வில்லியம்ஸ் என பலரும் வந்திருந்தனர்.
ஆனால் பிஎன்பி பாரிபாஸ் டென்னிஸ் தொடர் நடக்கும் ரிவர்சைட் கண்ட்ரி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒன்று காலை இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஃபேல் நடால் தனது ட்விட்டர் பக்கத்தில், '' இந்தியன் வெல்ஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். நாங்கள் தற்போது ரிவர்சை கண்ட்ரியில் இருக்கிறோம். அடுத்த என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை. இதேநிலை உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவுவது வருத்தமளிக்கிறது. இதற்கான தீர்வு கூடிய விரைவில் கண்டறியப்படும் என நம்புகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
கடைசி நேரத்தில் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் பலரும் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்!