உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கான போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போது சீனாவில் உள்ள செங்டு நகரில் நடைபெற்று வருகின்றது.
#WPFG 2019: இந்தியாவிற்கு இரண்டு தங்கபதக்கம் பெற்று தந்த காவலர்! - tennis singles
செங்டு: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஆஷிஷ் கபூர் உலக காவல் மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இரண்டு தங்கம் வென்றுள்ளார்.
இவ்விளையாட்டில் நடந்த ஆடவர் ஒற்றையர், இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டிகளில் இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் ஆஷிஷ் கபூர் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இது பற்றி பஞ்சாப் மாநில காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், ஆஷிஷ் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் உலக காவல் மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று வருகிறர் என்றார். மேலும் இவர், 2011 ஆண்டு ஒரு வெள்ளி பதக்கமும், 2013, 2015, 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் எனக் கூறினார்.