கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது கால்பந்து போட்டிகள் பார்வையாளர்களின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற விளையாட்டுப் போட்டிகளையும் தொடங்குவதற்கு விளையாட்டு சம்மேளனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றன.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப். 21இல் தொடங்கும்! - கரோனா வைரஸ் பாதிப்பு
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கும் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
french-open-to-begin-on-september-21-confirms-french-tennis-federation
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கப்படும் என பிரெஞ்சு டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. செப்.21ஆம் தேதியிலிருந்து செப்.26ஆம் தேதி வரை குவாலிஃபயர் போட்டிகள் நடைபெறும் எனவும், செப்.27ஆம் தேதியிலிருந்து அக்.11ஆம் தேதி வரை முக்கியப் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.