தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2ஆவது சுற்றுக்கு முன்னேறிய ப்ளிஸ்கோவா, பெலிண்டா பென்சிக், ஸ்விட்டோலினா! - ஸ்விட்டோலினா

பாரிஸ்: 2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று ப்ளிஸ்கோவா, பென்சிக், ஸ்விட்டோலினா உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

By

Published : May 27, 2019, 9:19 AM IST


டென்னிஸ் விளையாட்டின் முக்கிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் நட்சத்திர செக்குடியரசு வீராங்கனை கரோலினா ப்ளிஸ்கோவாவை (pliskova) எதிர்த்து அமெரிக்க வீராங்கனை மேடிசன்(madison) விளையாடினார்.

ப்ளிஸ்கோவா

அதில் ப்ளிஸ்கோவாவின் தாக்குதல் ஆட்டத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மேடிசன் திணறினார். இதனையடுத்து 6-2, 6-3 என்ற செட்களில் ப்ளிஸ்கோவா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பெலிண்டா பென்சிக்

பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்விஸ் நட்சத்திர வீராங்கனை பெலிண்டா பென்சிக்கை (belinda bencic) எதிர்த்து ஜெசிக்கா (jessica ponjet) ஆடினார். அதில் பெலிண்டா 6-1, 6-4 என்ற செட்களில் எளிதாக ஜெசிகாவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஸ்விட்டோலினா - வீனஸ் வில்லியம்ஸ்

இதனையடுத்து நடைபெற்ற நட்சத்திர உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விட்டோலினாவை (elina svitolina) எதிர்த்து அமெரிக்க நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (venus williams) இணை ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்விட்டோலினா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details