தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:அரையிறுதிக்கு முன்னேறிய ஜொகன்னா கொண்ட்டா! - french open tennis

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் ஸ்டீஃபன்ஸை வீழ்த்தி ஜொகன்னா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜொகன்னா

By

Published : Jun 5, 2019, 12:59 PM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கி பத்து நாட்கள் முடிந்துள்ள நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை இத்தொடர் எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜொகன்னா கொண்ட்டாவை எதிர்த்து அமெரிக்காவின் ஸ்டீஃபன்ஸ் மோதினார்.

ஜொகன்னா கொண்ட்டா

தரவரிசைப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ள ஸ்டீஃபன்ஸை எதிர்த்து இருபத்து ஆறாம் இடத்திலிருக்கும் ஜொகன்னா மோதியதால் ரசிகர்களிடையே இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆடிய ஜொகன்னா 6-1 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இதனை சற்றும் எதிர்பாராத ஸ்டீஃபன்ஸ், இரண்டாவது செட் ஆட்டத்தில் கவனமாக ஆடத் தொடங்கினார். இருந்தும், தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்த ஜொகன்னா இரண்டாவது செட்டை 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி பிரெஞ்சு ஓபன் தொடரின் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார்.

ஜொகன்னா - ஸ்டீஃபன்ஸ்

இந்த ஆட்டம் 71 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்தத் தொடரோடு சேர்த்து இதுவரை மூன்றுமுறை கிராண்ட்லாம் தொடர்களில் அரையிறுதி வரை ஜொகன்னா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details