டென்னிஸ் விளையாட்டின் மிகப்பிரபலமான தொடரான பிரெஞ்ச் ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (அக்.10) மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அமெரிக்காவின் சோஃபியா கெனின் - போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் நேருக்கு நேராக மோதினர். இதில் தொடக்க முதல் அதிரடியாக விளையாடிய ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்டை கைப்பற்றி கெனினுக்கு அதிர்ச்சியளித்தார்.