தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆண்டி முர்ரேவை போராடி வென்ற ஃபேபியோ! - டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஃபேபியோ ஃபோக்னினியிடன் ஆண்டி முர்ரே தோல்வியடைந்தார்.

ஆண்டி முர்ரே

By

Published : Oct 8, 2019, 11:40 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை எதிர்த்து இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினி ஆடினார்.

இரு நட்சத்திர வீரர்கள் ஆடிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் செட் ஆட்டம் தொடங்கியது முதலே ஒரு வீரர்களும் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தினர். முதல் செட் ஆட்டமே டை - ப்ரேக்கர் வரை சென்றது. டை- ப்ரேக்கர் முறையில் ஃபேபியோ முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றினார்.

அதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அனுபவ வீரர் முர்ரே, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-6 எனக் கைப்பற்றினார். அதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் பெரும் போராட்டத்தை நடத்தினர். ஒவ்வொரு புள்ளிக்கும் இருவரிடமும் அபாரமான ஆட்டம் வெளிப்பட்டது.

மூன்றாவது செட் ஆட்டமும் டை - ப்ரேக்கர் வரை சென்றதால், போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஃபேபியோ 7-6 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இதையும் படிக்கலாமே: 'அனல் பறக்க வைத்த ஆண்டி முர்ரே, திணறடித்த தீம்' - அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details