தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4ஆவது இடத்தில் ஃபெடரர்! - டென்னிஸ்

ஃபுளோரிடா: மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பட்டத்தை வென்றதையடுத்து, ஆடவருக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

4-வது இடத்தில் ஃபெடரர்!

By

Published : Apr 2, 2019, 10:49 AM IST

மியாமி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் ஃபுளோரிடாவில் அண்மையில் நடந்தது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் ஃபெடரர் தனது 101ஆவது பட்டத்தை வென்று டென்னிசில் அசைக்க முடியாத அளவிற்கு சிறந்த வீரராக திகழ்கிறார். இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது.

இதில், ஃபெடரர் மியாமி ஓபன் தொடரை வென்றதன் மூலம் ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், நான்காவது இடத்தில் இருந்த டோமினிக் தீம் தற்போது ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதில், செர்பிய வீரர் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் நடால் இரண்டாவது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசைப் பட்டியல் விவரம்:

1. நோவாக் ஜோகோவிச் - 11,070 புள்ளிகள்

2. நடால் - 8,725 புள்ளிகள்

3. அலெக்சாண்டர் ஸ்வெரேவ் - 6,040 புள்ளிகள்

4. ரோஜர் ஃபெடரர் - 5,590 புள்ளிகள்

5. டோமினிக் தீம் - 4,765 புள்ளிகள்

இந்தப் பட்டியலில், இந்திய வீரர் பிரேஜ்னேஷ் குணேஸ்வரன் 688 புள்ளிகளுடன் 81ஆவது இடத்தில் உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details