தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்த போபண்ணா இணை! - ஆஸ்திரேலியன் ஓபன் 2021

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை தோல்விடைந்து முதல் சுற்றோடு வெளியேறியது.

Bopanna bows out of mixed doubles, India's campaign ends in Aus Open
Bopanna bows out of mixed doubles, India's campaign ends in Aus Open

By

Published : Feb 13, 2021, 7:59 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டிகள் இன்று (பிப்.13) தொடங்கின. இதில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, சீனாவின் துவான் யிங்கிங் இணை - இங்கிலாந்தின் ஜேமி முர்ரே, அமெரிக்காவின் பெத்தனி மேட்டெக் இணையுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முர்ரே, பெத்தனி இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா, யிங்கிங் இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இத்தோல்வியினால் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர்களின் பயணம் இத்துடன் முடிவடைந்தது.

இதையும் படிங்க: 'ரசிகர்கள் தான் மைதானங்களின் மிகப்பெரும் பங்குதாரர்கள்' - லக்ஷ்மன், ஜாஃபர் புகழாரம்!

ABOUT THE AUTHOR

...view details