தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெலிண்டா பென்சிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்! - பெலிண்டா பென்சிக்

பெய்ஜிங்: சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கிடம் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

பெலிண்டா

By

Published : Oct 1, 2019, 10:29 AM IST

2019ஆம் ஆண்டுக்கான சீனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் ஆடிய போட்டிக்கு ரசிகர்களிடயே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய வீனஸ் 6-3 என கைப்பற்றினார். இதையடுத்து நிதானமாக ஆடிய பெலிண்டா பென்சிக் இரண்டாவது செட்டை 6-3 என தனதாக்கினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெலிண்டா பென்சிக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்

இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிக்கு சமமாக மோதினர். இதனால் இந்த செட் ஆட்டம் டை ப்ரேக்கர் வரை சென்றது. இறுதியாக 7-5 என சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரிலும் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:இனி 'நோவாக் நோவாக்' என்ற குரல்கள் அதிகமாக எழும்!

ABOUT THE AUTHOR

...view details