2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சன் ஆடினார். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே ஃபெடரர் சிறப்பாக ஆடினார். இதன் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தில் 6-2 எனக் கைப்பற்றி ஃபெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்குப் பின் ஃபெடரர் பேசுகையில், ‘இந்த வெற்றி எனது மன உறுதியை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் எனக்கு காயம் ஏற்படாதது நல்ல விஷயமாகக் கருதுகிறேன்’ எனத் தெரிவித்தார்.