2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஓபனுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.
அந்த தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் குணேஸ்வரன் கலந்துகொண்டார். இதன் கடைசி தகுதிச்சுற்றில் லாட்வியாவின் எர்னஸ்ட் குல்பிஸை எதிர்த்து ஆடினார். இந்தப் போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் சிறப்பாக ஆடியதால், டை ப்ரேக்கர் வரை சென்றது. டை ப்ரேக்கரின் தொடக்கத்திலேயே இந்திய வீரர் எதிரணி வீரருக்கு முன்னிலை கொடுக்க, முதல் செட் ஆட்டம் கையைவிட்டு சென்றது. அதையடுத்து 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை எர்னஸ்ட் கைப்பற்றினார்.