தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் மெத்வதேவ்!

Australian Open: Medvedev beats Tsitsipas to meet Djokovic in final
Australian Open: Medvedev beats Tsitsipas to meet Djokovic in final

By

Published : Feb 19, 2021, 4:50 PM IST

Updated : Feb 19, 2021, 5:20 PM IST

16:43 February 19

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டிக்கு ரஷ்யாவின் நட்சத்திர வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறியுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் நட்சத்திர வீரர் டேனில் மெத்வதேவ், கிரீஸின் ஸ்டெஃபோனஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய மெத்வதேவ், முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி சிட்சிபாஸிற்கு அதிர்ச்சியளித்தார்.  

அதன்பின் ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட மெத்வதேவ், 7-5 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.  

இதன் மூலம் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்குகளில் கிரீஸின் சிட்சிபாஸை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  

நாளை மறுநாள் (பிப்.20) நடைபெறும் ஆஸ்திரெலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை, மெத்வதேவ் எதிர்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஃபிலிப் ஐஸ்லாண்ட் கோப்பை: அங்கிதா ரெய்னா சாம்பியன்!

Last Updated : Feb 19, 2021, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details