தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி கொடுத்த அனஸ்டேசியா! - அனஸ்டேசியா vs ஏஞ்சலிக் கெர்பர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் கெர்பரை வீழ்த்தி ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

australian-open-anastasia-pavlyuchenkova-upsets-angelique-kerber-in-fourth-round
australian-open-anastasia-pavlyuchenkova-upsets-angelique-kerber-in-fourth-round

By

Published : Jan 27, 2020, 9:51 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்த்து ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா ஆடினார்.

இந்தப் போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இரு வீராங்கனைகளும் 6-6 என்ற புள்ளிகளை எட்டினர். இதையடுத்து நடந்த டை ப்ரேக்கர் மூலம் கெர்பர் 7-6 (7-5) என முதல் செட்டைக் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் மீண்டும் டை ப்ரேக்கர் வரை சென்றது.

அனஸ்டேசியா

இதில் சிறப்பாக விளையாடிய அனஸ்டேசியா 7-6 (7-4) என இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். பின்னர் நடந்த மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய அனஸ்டேசியா 6-2 என ஆட்டத்தைக் கைப்பற்றி போட்டியில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியையடுத்து ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு அனஸ்டேசியா தகுதிபெற்றார்.

இதையும் படிங்க: போராடிய மெத்வதேவ்; காலிறுதிக்கு முன்னேறிய வாவ்ரிங்கா!

ABOUT THE AUTHOR

...view details