தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜோகோவிச்சால் முடிவுக்கு வந்த ஃபெடரரின் ஆஸ்திரேலியன் ஓபன் கனவு! - Djokovic beats Federer

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் முன்னேறினார்.

aus-open-djokovic-beats-federer-in-straight-sets-to-reach-final
aus-open-djokovic-beats-federer-in-straight-sets-to-reach-final

By

Published : Jan 30, 2020, 7:09 PM IST

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து செர்பிய நட்சத்திர வீரர் ஜோகோவிச் ஆடினார். இரு பெரிய வீரர்கள் ஆடும் போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய ஃபெடரர் 4-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார். இதையடுத்து விஸ்வரூபம் எடுத்த ஜோகோவிச் 5-5 என சமன்செய்தார். தொடர்ந்து 6-6 என்ற நிலை ஏற்பட்டபோது, ஆட்டம் டை பிரேக்கருக்குச் சென்றது. டை பிரேக்கரில் 7-1 எனக் கைப்பற்றியதால் முதல் செட்டை 7-6 (7-1) என்று கைப்பற்றினார்.

முதல் செட் தோல்வியிலிருந்து மீள முடியாத ஃபெடரரை அடுத்த செட்டில் 6-4 என ஜோகோவிச் வீழ்த்த, மூன்றாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி ஜோகோவிச் ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஜோகோவிச்சை ஃபெடரர் பழிதீர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றையப் போட்டியிலும் ஃபெடரர் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: ஆபாச வார்த்தை பேசிய சாம்பியனுக்கு அபராதம் விதிப்பு

ABOUT THE AUTHOR

...view details