ஐ.டி.எஃப். தாய்லாந்து மகளிர் டென்னிஸ் தொடர் ஜனவரி 29ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவை எதிர்த்து பிரெஞ்சு வீராங்கனை க்லோ பப்பட் ஆடினார்.
அதில் தொடக்கம் முதலே அபாரமாகச் செயல்பட்ட அங்கிதா ரெய்னா 6-3, 7-5 என அடுத்தடுத்து இரண்டு செட்களையும் வென்று அங்கிதா வென்றார். அங்கிதா ரெய்னா இந்த ஆண்டின் வெற்றிபெறும் முதல் ஐ.டி.எஃப். தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக ஐ.டி.எஃப். ஒற்றையர் பிரிவு தொடரை 9 முறை அங்கிதா ரெய்னா வென்றுள்ளார்.