உலக பலகலைகழகங்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாப்போலியாவில் நடைப்பெற்று வருகின்றன. இன்று மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச் சுற்று நடைப்பெற்றது.
உலக பல்கலைகழக போட்டியில் தங்கம் வென்றார் டூட்டி சந்த் இதில் இந்தியாவைச் சேர்ந்த தடகள வீரங்கனை துத்தி சந்த் 100மீ ஓட்டத்தை 11:32 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பல்கலைகழக போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் உலக பல்கலைக்கழக விளையாட்டு வரலாற்றில் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்றதில்லை.
இதுகுறித்து சந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "பல வருட கடின உழைப்பு மற்றும் உங்கள் ஆசீர்வாதங்களுடன், நாப்போலியின் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 11:32 வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளேன்." இவ்வாறு ட்வீட் செய்தார்.
மேலும் 100 மீட்டர் ஓட்டத்தை 11:24 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.