கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலினால் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் இறுதியில் தொடங்குவதாக இருந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடர், தற்போது ஜூலை 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஸ்னூக்கர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஸ்னூக்கர் கூட்டமைப்பின் தலைவர் பேரி ஹியர்ன் (Barry Hearn) கூறுகையில், " ஸ்னூக்கர் வீரர்கள் சுயமாக இவ்விளையாட்டில் பங்கேற்பவர்கள். அவர்களுக்கு இதன் மூலம் மட்டுமே சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உலகில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நாங்கள் வீரர்களின் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டியுள்ளது.